இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 23 ஆம் திகதி புத்தள இராணுவப் போர் கல்லூரியின் தளபதியாக கடமைப் பொறுப்பேற்றார்.

அவர் இராணுவப் போர்க் கல்லூரியின் படையினருக்கு உரையாற்றிய அவர் இராணுவப் போர்க் கல்லூரியின் நோக்கங்கள், ஏதிர் கால திட்டங்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் அனைவரின் பங்களிப்பு மற்றும் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.