23 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்கள் 23 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக 2025 ஜூன் 23 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு 7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், பணிநிலையாளர்களினால் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியின் போது பொறுப்பிலுள்ள பிரதேசம் குறித்த விரிவான விளக்கத்தை தளபதி பெற்றுக்கொண்டர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.