25th June 2025
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர், வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 2025 ஜூன் 21 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை கவச வாகனப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படையினருக்கு உரையாற்றிய படைத் தளபதி, அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், வெளிச்செல்லும் தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன், அன்றைய நிகழ்வுகள் முடிவடைந்தன, இது வெளிச்செல்லும் தளபதி அனைத்து நிலையினருடனும் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.