23rd June 2025
வளர்ந்து வரும் மனித-யானை மோதலைத் தணிக்கும் முயற்சியாக, கிழக்கு பாதுகாப்புப் படையினர் 7 வது இலங்கை பீரங்கி படையணி, 12 வது கெமுனு ஹேவா படையணி, 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து 2025 ஜூன் 19 ஆம் திகதி மிவிதபுரத்திலிருந்து நுவரகலைக்கு 26 காட்டு யானைகளை விரட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மிவிதபுர, மதகம்பிட்டி, நவகஹா எல மற்றும் நுவரகலை ஆகிய பாதிக்கப்படக்கூடிய விவசாய நிலங்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை, குறிப்பாக நெல் வயல்களுக்கு ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுப்பதையும், உள்ளூர் விவசாய சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ மற்றும் திட்ட அதிகாரி பிரிகேடியர் டபிள்யூ.எஸ்.ஆர். குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ ஆகியோரின் தலைமையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது சமூக பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கான இராணுவத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.