23rd June 2025
ஒரு குறிப்பிடத்தக்க சமூக சேவையாக, 2025.06.15 ஆம் திகதி மருதங்கேணி மருத்துவமனையில் இரத்த தான திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல், 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.என் பெர்னாண்டோ ஆர்எஸ்பீ மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜே.ஏ.சீ கருணாதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வை 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.டி.எஸ். அலஹகோன் ஏற்பாடு செய்திருந்ததுடன், அவர் இத்திட்டத்திற்கான வளங்களையும் பங்கேற்பாளர்களையும் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார். நாற்பத்து நான்கு வீரர்கள், ஐந்து பொதுமக்கள் மற்றும் 03 பொலிஸார் இரத்த தானம் செய்யது உள்ளூர் சமூகத்தை ஆதரிப்பதில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.
இந்த முயற்சிக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் ஆதரவு கிடைத்தது. பொதுமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு இராணுவ வீரர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இரத்த தானத் திட்டம் மருத்துவமனையின் இரத்த வங்கியின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், உயிர்களைக் காப்பாற்றுவதில் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.