23rd June 2025
சமூக பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் குறிப்பிடத்தக்க செயலாக, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி 2025 ஜூன் 19 ஆம் திகதி மட்டக்களப்பில் இரத்த தானத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முயற்சி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. 243 வது காலாட் பிரிகேடின் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி, கிழக்கு மாகாணத்தில் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே வலுவான பிணைப்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பரந்த சிவில்-இராணுவ ஒத்துழைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை மேற்கொண்டது.
இந்த இரத்ததானத்தின் போது சேகரிக்கப்பட்ட இரத்த அலகுகள் பிராந்திய இரத்த வங்கியை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.