20th June 2025
இலங்கை இராணுவம், 2025 ஜூன் 20 ஆம் திகதி இராணுவத்தின் பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளித்தது.
வருகையின் போது சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், அவர் இலங்கை பொறியியல் படையணி படையினரால் வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதையை பெருவதற்காக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, வெளிச்செல்லும் பிரதி பதவி நிலைப் பிரதானி சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.