குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.51 நிறைவு

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை நடாத்திய, படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.51 யை 2025 ஜூன் 18 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் லெப்டினன் கேணல் டி.பி. ராஜசிங்க நினைவு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

இந்த நிகழ்வில் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 06 அதிகாரிகள் மற்றும் 28 சிப்பாய்கள் பங்கேற்றனர். குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.ஜே.ஜீ.ஏ.எம். சுபசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இலங்கை பொறியியல் படையணியின் கெப்டன் எல்.ஆர். வீரமந்திரி அவர்கள் தகுதி வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.