16th June 2025
2025 ஜூன் 16 ஆம் திகதி நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களுக்கான அதிகாரச் சின்னங்களை சம்பிரதாயபூர்வமாக வழங்கினார்.
மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரல் கேஎம்வீ கொடிதுவக்கு, மேஜர் ஜெனரல் எச்எஎம் பிரேமரத்ன என்டிசீ பீஎஸ்சீ எல்எஸ்சீ, மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் ஜீசீவீ பெர்னாண்டோ என்டிசீ ஆகியோர் அடங்குவர்.
இராணுவத் தளபதி, புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் குடும்பத்தினருடன் சேர்ந்து, அவர்களின் சின்னங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி, அவர்களின் தொழில் சாதனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சிரேஷ்ட அதிகாரிகளின் நன்றியுணர்வின் வெளிப்பாடுகள் மற்றும் குழு படத்துடன் நிகழ்வு நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து தளபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக சின்னங்கள் வழங்கப்பட்டன.