மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட இராணுவ வலைத்தளம் செயல்பாட்டுக்கு வருகிறது

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.army.lk நாட்டில் அடிக்கடி பார்வையிடப்படும் பாதுகாப்பு துறை தளங்களில் ஒன்றாகும். இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இராணுவத்தின் டிஜிட்டல் உருமாற்ற பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட வலைத்தளம் 2025 ஜூன் 18 முதல் பார்வையாளர்களுக்கு நேரலையில் இருக்கும்.