15th June 2025
அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவு நீச்சல் தடாகத்தில் அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 24 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பல்வேறு படையலகுகளை சேர்ந்த 25 சிப்பாய்களின் பங்கேற்புடன் இப்பாடநெறி நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய் ஜே.எம்.யூ.வை.எம் குணசேகர அவர்களுக்கு பாடநெறியின் சிறந்த மாணவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.