14th June 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 13 ஆம் திகதி 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.டபிள்யூ விஸ்வமித்ர பீஎஸ்சீ அவர்களால் மரியாதையுடன் சிரேஷ்ட அதிகாரி வரவேற்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, படையணியின் தற்போதைய கடமைகள் மற்றும் செயற்பாட்டுப் பொறுப்புகள் பற்றி கட்டளை அதிகாரி விரிவான விளக்கத்தை வழங்கினார்.
பின்னர், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி படையினருக்கு உரையாற்றினார். விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன் விஜயம் முடிவடைந்தது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.