13th June 2025
நடவடிக்கைகள் பணிப்பகத்தின் கீழ் "தூய இலங்கை" திட்டத்தின் கேணல் ஒருங்கிணைப்பாளர் கேணல் எம்.என். குணவர்தன பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஒருகொடவத்தை சிவில் நிர்வாக பணிப்பகத்தில் தேசிய "தூய இலங்கை" கருத்து குறித்த விரிவுரையை நடத்தினார். இராணுவத்தின் 71 சிவில் ஊழியர்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.