22nd May 2025
பிரிகேடியர் வைஎம்எஸ்சீபி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2025 மே 15 வியாழக்கிழமை அன்று இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் இடம்பெற்ற சுருக்கமான விழாவில், இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அவர்களால் தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், சிரேஷ்ட அதிகாரி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர், முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். இறுதியாக, இலங்கையின் அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதிய தளபதி உரையாற்றினார்.