6th February 2025
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 30 அன்று ரணவிரு ஆடை தொழிற்சாலையில் நடைபெற்ற முகாமைத்துவ குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
வருகை தந்த அவரை, ரணவிரு ஆடை தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் எம்ஜீஎஎன்பி மஹத்துவக்கார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன், ரணவிரு ஆடை தொழிற்சாலை பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
நடைபெற்ற முகாமைத்துவ குழு கூட்டத்தை தொடர்ந்து, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி முகாமைத்துவ குழு உறுப்பினர்களுடன் இணைந்து, தொழிற்சாலையின் அனைத்து உற்பத்திப் பிரிவுகளையும் பார்வையிட்டதுடன், உற்பத்தித்திறனை அதிகரிக்க தேவையான வழிமுறைகளை அவர் வழங்கினார். மேலும், படையினருக்கு ஆற்றிய உரையின் போது, இராணுவத்தின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதில் தொழிற்சாலை ஊழியர்கள் ஆற்றிய பங்களிப்பை மிகவும் பாராட்டினார்.
அதிகாரிகள் உணவகத்தில் அனைத்து அதிகாரிகளுடனும் நடைபெற்ற ஊடாடும் அமர்வுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. இறுதியாக, ரணவிரு ஆடை தொழிற்சாலையின் தளபதி அனைத்து முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுப் பரிசில்களை வழங்கினார். பின்னர், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி அதிதிகள் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக்களை பதிவிட்டார்.
முகாமைத்துவ குழு கூட்டத்தில் போர் கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜி.பீ.எஸ்.கே அபேசிங்க மற்றும் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோர் பங்கேற்றனர்.