13th June 2025
2025 ஜூன் 10 ஆம் திகதி பொசன் பண்டிகையை முன்னிட்டு, வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவு மற்றும் வன்னி வழங்கல் கட்டளை படையினர் அனுராதபுரத்தில் தொடர்ச்சியான மத மற்றும் சமூக ஆதரவு திட்டங்களை மேற்கொண்டனர்.
ருவன்வெலி மகா சேய, அபயகிரிய, லங்காராமய, துபாராமய மற்றும் மிகிந்தலை விகாரை போன்ற முக்கிய புனித தலங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களுக்கு வசதியாக சுகாதார வசதிகள், தற்காலிக மருத்துவ உதவி நிலையங்கள், தற்காலிக கூடாரங்கள் நிறுவப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சந்தஹிரு தூபி நிர்வாக அலுவலகம், வன்னி வழங்கல் கட்டளையுடன் இணைந்து சந்தஹிரு தூபி வளாகத்தில் அன்ன தானம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
54 வது காலாட் படைப்பிரிவின் படையினர், அதன் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுடன் இணைந்து 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 ஜூன் 10 முதல் 12 வரை தல்லடி சந்தி அருகே மன்னார் பொசன் வலயம் 2025 யை ஏற்பாடு செய்திருந்தனர்.
பொசன் வலயத்தில் பொசன் விளக்குகள், மிஹிந்தலையின் விரிவான பிரதி, தோரணம் (பந்தல்), பக்தி பாடல்கள் பாடுதல் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட ஆன்மீக மற்றும் கலாசார காட்சிகள் இடம்பெற்றன, இது ஏராளமான பக்தர்களை ஈர்த்தது.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவில் 2025 ஜூன் 10 ஆம் திகதி பாலாக்காய் அவியல் தானம் வழங்கப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படையினால் அனுராதபுரத்தில் பொசன் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் ஆரம்பித்து வைப்பு
54வது காலாட் படைப்பிரிவின் படையினர் ஏற்பாட்டில் மன்னாரில் 2025 க்கான பொசன் வலயம்
21 வது காலாட் படைப்பிரிவின் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்டம்