கொழும்பு புனித பெனடிக் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவத் தளபதி

கொழும்பு புனித பெனடிக் கல்லூரியில் 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களும் கலந்து கொண்டார்.

புனித பெனடிக் கல்லூரியானது அவரது சிறந்த பண்புகள் மற்றும் தலைமைத்துவப் பயணத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், இன்றைய அவரது நிலைக்கு அடித்தளமாக அமைந்த இடமாகும்.

தளபதியினை வண. அருட் சகோதர பணிப்பாளர் அன்புடன் வரவேற்றதுடன் தொடர்ந்து பாடசாலை பேண்ட் வாத்திய இசைக்குழுவின் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் நேர்த்தியான 'முகமூடி நடனம்' மூலமான வரவேற்பும் வழங்கப்பட்டது. பின்னர் அவர் ஒற்றுமை மற்றும் தேசபக்தியைக் குறிக்கும் வகையில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் பாடசாலை மாணவர் சிப்பாய் படைக்குழுவின் அணிவகுப்பு மரியாதை இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டது.

பாரம்பரிய விழா மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் நடைபெற்றன. பின்னர் கல்லூரி சிரேஸ்ட மாணவத் தலைவன் செல்வன் ஆரோன் ஜான்பிள்ளை உரையாற்றினார்.

தனது உரையில், இராணுவத் தளபதி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து, வெற்றியைத் தேடுவதில் ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகளை வலியுறுத்தினார். மேலும், "உலகம் உங்களுக்கு வெற்றிகளைக் கொடுக்காது; நீங்கள் உறுதிப்பாடு மற்றும் தளராத முயற்சி மூலம் அவற்றைப் பெற வேண்டும்" என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டி, மீள்தன்மையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

முன்னாள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, எயார் வைஸ் மார்ஷல் டிபிவி வீரசிங்க யூஎஸ்பீ எம்டிஎஸ் பிஎஸ்சீ (பாதுகாப்பு கற்கை) எம்ஐஎம் (இலங்கை) பீஎஸ்சீ, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாக பணிப்பாளர் பிரிகேடியர் எல்டபிள்யூவீஎஸ்ஆர் வீரசிங்க (இகவாப), இலங்கை இராணுவ சேவைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எஸ்டிஎன்சீ டி சில்வா மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்எம்வை செனவிரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின்யின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதி புதிதாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு ஒரு முறையான தேனீர் விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தது.