11th February 2025
இலங்கை இராணுவத்தின் முன்னாள் பதவி நிலை பிரதானியும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு, 2025 பெப்ரவரி 8 அன்று அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த அவரை, இலங்கை சிங்கப் படையணியின் பிரதி நிலைய தளபதி வரவேற்றதுடன், பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் இலங்கை சிங்கப் படையணியின் வீரமரணமடைந்த போர் வீரர்களின் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தல் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கவர்ச்சிகரமான இரவு விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இந்நிகழ்வின் போது 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களினால் ஓய்வுபெறும் படையணியின் படைத் தளபதிக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.