ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 13 அன்று தனது 91 வயதில் காலமானார்.

மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் பூதஉடல், இறுதி அஞ்சலிக்காக 2025 ஜூன் 13 அன்று மாலை முதல் எண் 488/1, மதுகஹவத்த, கலுகொடயாவ, மல்வானை என்ற முகவரியில் வைக்கப்படும்.

அவரது இறுதிச் சடங்கு, முழு இராணுவ மரியாதையுடன், 2025 ஜூன் 15, அன்று மாலை 5.30 மணிக்கு பொரெல்ல பொது மயானத்தில் நடைபெறும்.