தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

இலங்கை இராணுவ முய்தாய் தடகள வீரர்கள் 2025 ஜூன் 05 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற தேசிய முய்தாய் சாம்பியன்ஷிப் - 2025 இல் 17 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களை பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக தமது வெற்றியை பதித்தனர்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.ஜி.சீ.எஸ்.டி கொடித்துவக்கு சிறந்த ஆண் குத்துச்சண்டை வீரராகவும், பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பெண் சிப்பாய் டபிள்யூ.ஜீ.சீ.ஜே. திலகரத்ன சிறந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனை பட்டத்தையும் வென்றனர்.

அரச அதிகாரிகள், ரோயல் தாய் தூதரக பிரதிநிதிகள், இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் ஏனைய போட்டியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.