12th June 2025
இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களை ஆசிர்வதிக்கும் வகையில், கொமாண்டோ படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் கே.வி.ஐ.எல். ஜயவீர யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ராகம போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து, கொமாண்டோ படையணி வளாகத்தில் 2025 ஜூன் 11 ஆம் திகதி இரத்த தான முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.