இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பொசன் பௌர்ணமி தின கொண்டாட்டம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, இலங்கை இராணுவ பௌத்த சங்கத்துடன் இணைந்து 2025 ஜூன் 10 ம் திகதி அன்று பனாகொடை ஸ்ரீ மஹா போதிராஜராமையில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 'சீல சமாதி' நிகழ்வு ஏற்பாடுடன் பொசன் பௌர்ணமி தினத்தைக் கொண்டாடியது.

இந்த நிகழ்ச்சியின் போது, மகா சங்கத்தினரால் போதி பூஜை, தியான அமர்வுகள், மத அனுஷ்டானங்கள் மற்றும் பிரித் பாராயணம் ஆகியவை நடாத்தப்பட்டன. இந்த நிகழ்வு, வீரமரணம் அடைந்த போர் வீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள், சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், சிவில் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் தேசத்திற்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆன்மீக அனுஷ்டானங்களில் பங்கேற்றனர்.