கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு

தொற்றாத நோய்கள் தொடர்பான விரிவுரை 2025 மே 01 ம் திகதி அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. இந்த விரிவுரையை இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் ஜீஏ ராஜபக்ஷ நிகழ்த்தினார். இவ் விழிப்புணர்வு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர்களிடையே விழிப்புணர்வையும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.