16th May 2025
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, 06 அதிகாரிகள் மற்றும் 06 சிப்பாய்களை கொண்ட மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் குழுவிற்கு, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 மே 08 முதல் 09 வரை அதுருகிரிய ஓடிபி (OBD) கல்வியற் கல்லூரியில் வாகன ஸ்கேனிங் மற்றும் பிரச்சினைகளை கண்டறிதல் குறித்த இரண்டு நாள் பட்டறையை நடாத்தியது.
இந்த நிகழ்ச்சியில், வாகனங்களின் உள் பிரச்சினைகளை கண்டிதல், தவறுகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் வாகன ஸ்கேனிங்கின் சிறப்பு செயல்பாடுகள் பற்றிய அறிமுகம் மற்றும் நிகழ்நேர நடைமுறை அமர்வுகள் ஆகியவை அடங்கியிருந்தது.