6th June 2025
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினருடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான பாடநெறி இலக்கம் 30 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 ஜூன் 05 முதல் ஜூன் 04 வரை ந்த்தப்பட்டது.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 28 பேரும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 4 பேரும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 36 பேர் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தனர். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் மற்றும் அதன் நடைமுறை தாக்கங்கள் பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் வை எம் எஸ் சீ பி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக விழாவில் கலந்து கொண்டார். கமாண்டோ படையணியின் கோப்ரல் என் எஸ் கமகே தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்றார்.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.