2025 பாதுகாப்பு சேவைகள் பூப்பந்து போட்டியில் இராணுவ அதிகாரிக்கு தங்கம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் லெப்டினன் கேணல் யூ.வீ. சமிந்த புஷ்பசிறி அவர்கள் வெலிசர கடற்படை தலைமையகத்தில் 2025 மே 14 முதல் 18 வரை நடைபெற்ற 13 வது பாதுகாப்பு சேவைகள் பூப்பந்து சாம்பியன்ஷிப் 2025 இல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் ஜோடி (50 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளார்.