ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இராணுவ தடகள வீரர் புதிய சாதனை

2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இலங்கை தடகள வீரர் ஒருவர் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 400 மீட்டர் ஓட்ட பேட்டியில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதால், இந்த மைல்கல் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.