51வது காலாட் படைப்பிரிவினரால் தூய்மை திட்டம்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தொடங்கப்பட்ட ‘ தூய இலங்கை” திட்டத்தின்’ ஒரு பகுதியாக, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில், 51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஏஸ்சீ அவர்களின் மேற்பார்வையில், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் துப்புரவு திட்டம் 2025 ஜனவரி 21 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

511, 512, மற்றும் 513 வது காலாட் பிரிகேட் படையினர், யாழ் தொல்பொருள் துறை, யாழ் மாநகர சபை, இலங்கை பொலிஸ் மற்றும் உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க யாழ்க் கோட்டை பாரம்பரிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் யாழ் - பலாலி சாலையின் இருபுறமும் சுத்தம் செய்யும் பணியை மேற் கொண்டனர்.

"அழகான நாடு, சிரிக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட "தூய இலங்கை" முயற்சிக்கு இந்த கூட்டு முயற்சி ஒரு பெருமைமிக்க பங்களிப்பாகும். ஒற்றுமை மற்றும் உறுதியுடன், அவர்கள் இந்த அடையாள சின்னமான இடத்தை தூய்மை மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றினர், நாட்டின் பகிரப்பட்ட பாரம்பரியத்தையும் அழகையும் வெளிப்படுத்தினர்.

அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் துப்புரவு திட்டத்தில் பங்கேற்றனர்.