29th January 2025
மத்திய மாகாண பொறியியல் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தலைமைத்துவம், நேர்மறை சிந்தனை மற்றும் ஆளுமை மேம்பாடு பற்றிய விரிவுரையை 2025 ஜனவரி 28 ஆம் திகதி பொறியியல் சேவைகள் திணைக்கள வளாகத்தில் நடாத்தினார்.
திணைக்களத்தின் நிர்வாக அதிகாரிகள் விரிவுரையில் பங்கேற்றதுடன், நிகழ்வின் நிறைவில், மத்திய மாகாண பொறியியல் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், தளபதிக்கு நினைவு சின்னத்தை வழங்கினார்.