காட்டு யானைகளிடமிருந்து சேதத்தைத் தடுக்கும் முயற்சியில் கிழக்கு பாதுகாப்புப் படையினர்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படையின் திட்ட அதிகாரி பிரிகேடியர் டபிள்யூ.எஸ்.ஆர். குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையணி, வனவிலங்கு பாதுகாப்புத் துறை (பிம்புரத்தேவ வனவிலங்கு அலுவலகம்) மற்றும் மகாவலி அதிகாரிகள் இணைந்து 21 காட்டு யானைகளை வீரலந்த குளத்திலிருந்து மதுரு ஓயா தேசிய பூங்காவிற்கு 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி இடமாற்றம் செய்தனர்.

இந்த நடவடிக்கை திம்புலாகல பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கியதுடன், இதில் கலேலிய, வாரபிட்டிய, வெஹெரகல மற்றும் கஜுவத்த கிராம நிர்வாக பிரிவுகள் அடங்கும், இதில் யானைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 800 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கைகள் அடங்கும். மனித-யானை மோதலைத் தடுக்கவும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்த இடம்பெயர்ந்த யானைகள் தேசிய பூங்காவிற்கு பாதுகாப்பாக இடமாற்றப்பட்டன.

இந்த திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.