6th February 2025
77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 4ம் திகதி பொலன்னறுவை பெரகும் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் கலிப்சோ இசைக்குழுவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அங்கு இருப்பவர்களை மகிழ்சிபடுத்தியது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.