6 வது பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் அத்தனகல்லவில் சமூகநல திட்டம்

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6 வது பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்சீ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வைடிஎன் டி சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், அத்தனகல்ல "செவன" முதியோர் இல்லம் மற்றும் "இசுரு" சிறுவர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் 2025 பெப்ரவரி 04ம் திகதி படையினரால் முன்னெடுக்கப்பட்டன.

இந்த திட்டத்தின் போது, 18 முதியோர் மற்றும் 10 ஊழியர்களின் நலனுக்காக இரண்டு இரும்பு படுக்கைகள், இரண்டு பிளாஸ்டிக் துணி கொள்கலன்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், சிறுவர் இல்லத்தின் 20 சிறுவர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.