கிளிநொச்சி 55 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சிறுவர் பூங்கா நிர்மாணிப்பு

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கிளிநொச்சி பிரதேச சிறுவர்களின் மகிழ்ச்சி மற்றும் திறமைக்காக 'சிறுவர் பூங்கா' ஒன்றை நிர்மாணித்தனர்.

'தூய இலங்கை' திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி 2025 பெப்ரவரி 05 அன்று நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாலர் பாடசாலையின் 25 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், சிறுவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.