242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திற்கு உதவி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், 2025 பெப்ரவரி 4ம் திகதியன்று திருக்கோவில் மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.