12 வது காலாட் படைப்பிரிவினரால் கடற்கரை தூய்மைபடுத்தும் திட்டம்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவினரால், “தூய இலங்கை திட்டத்தின்” ஒரு பகுதியாக, 2025 பெப்ரவரி 09, அன்று கடற்கரையில் சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை அரசாங்க அதிகாரிகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஹம்பாந்தோட்டை முதல் தங்காலை வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குப்பைகளை அகற்றி கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதில் முதன்மை கவனம் செலுத்திய இந்த திட்டத்திற்கு 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி வழிகாட்டுதலை வழங்கினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட மொத்தம் 181 இராணுவத்தினர் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.