சுதந்திர தினத்தை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உதவி

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று புனித தெரேசா முதியோர் இல்லத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், குடியிருப்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. அத்துடன், முதியோர் இல்லத்தின் பயன்பாட்டிற்காக சுகாதாரப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த முயற்சியின் இரண்டாம் கட்டமாக, கோப்பாய் பகுதியில் 150 சிறுவர்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டது.