15th February 2025
54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் கேபீஎம்என் குணசேகர அவர்கள் நேர்மை மற்றும் முன்மாதிரியாக செயற்பட்டு 102,220 ரூபாய் கொண்ட தொலைந்த பணப்பையை முக்கிய ஆவணங்களுடன் உரியவரிடம் அனுப்பி வைத்துள்ளார்.
2025 பெப்ரவரி 11ம் திகதி மன்னார் நகரில் உள்ள ஒரு வங்கியில் இருந்தபோது, தொலைந்து போன ஒருவருடைய பணப்பை அவரிடம் கிடைத்தது, அதன் உரிமையாளர் திருமதி சுந்தரராசா மேரி சுதர்ஷனி அவர்களுக்கு கிடைக்கும் வகையில், அவர் அதனை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவரது நேர்மையை அங்கீகரித்து, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி இலங்கை இராணுவத்தின் உயர் மதிப்புகளை நிலைநிறுத்தியதற்காக அவரைப் பாராட்டினார். மேலும், மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவரது முன்மாதிரியான நடத்தையை அங்கீகரிக்கும் விதமாக பாராட்டு கடிதத்தை வழங்கினார்.