தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க 7 (தொ) இலங்கை கவச வாகன படையணியினால் சிரமதான திட்டம்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 212 வது காலாட் பிரிகேட்டின் 7 (தொ) இலங்கை கவச வாகனப் படையணியின் படையினர் 2025 பெப்ரவரி 15 அன்று அவுகனை பழைய விகாரையில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.