17th February 2025
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 3 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர் 2025 பெப்ரவரி 11 அன்று பரகும் கிராமத்தில் குடிநீர் வழங்கல் திட்டத்தை திரு. மங்கள பீரிஸ் அவர்களின் நிதி உதவியுடன் நிறுவினர். இத்திட்டம் சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 3 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ, 3 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், திட்டத்தின் நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.