17th February 2025
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 16 அன்று "நமது கரைகளைப் பாதுகாத்தல், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ, 22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவுகளின் கீழ் பணியாற்றும் படையினர், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த துப்புரவு முயற்சியில் பங்கேற்றனர்.