144 வது காலாட் பிரிகேட்டினரால் சிரமதான பணி

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 144 வது காலாட் பிரிகேட், அரசாங்கத்தின் தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 பெப்ரவரி 15 அன்று ஒரு பெரிய அளவில் சிரமதான பணியை முன்னெடுத்தனர். இந்த திட்டம் பொல்துவ சாலை, பாராளுமன்ற சாலை, இலங்கை-ஜப்பான் நட்புறவு சாலை, துருமித்திரு திட்டப் பகுதி மற்றும் தியவன்னா ஏரி போன்ற முக்கிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிகத் துறைகளின் கௌரவ பிரதி அமைச்சர் சத்துர அபேசிங்க மற்றும் பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் திரு. குஷான் ஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர், பல அரச அதிகாரிகள், அமைப்புகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.