பாடசாலை மாணவர்களின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டு நிகழ்வில் 141 வது காலாட் பிரிகேட் தளபதி லக்பஹான கலந்து சிறப்பிப்பு

கந்தானை, லக்பஹான சர்வதேச பாடசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவ தலைவர்களின் சின்னம் சூட்டு நிகழ்வு 2025 பெப்ரவரி 14 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவ தலைவர்களின் பொறுப்பு, நேர்மை மற்றும் நம்பிக்கையுடன் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொள்ள அதிகார, தலைமைத்துவக் கொள்கைகள் தொடர்பாக அறிவு மற்றும் ஊக்கமளிக்கும் விரிவுரயை அவர் நிகழ்த்தினார். இதன்போது பாடசாலையில் முன்மாதிரியாக வழிநடத்துவதன் முக்கியத்துவத்தையும் குழுப்பணியை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனையோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.