21st February 2025
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் ‘தூய இலங்கை’ திட்டத்தின் முதல் கட்டமாக, 2025 பெப்ரவரி 20, அன்று படையினர் பாடசாலை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் போது, அந்தப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பாடசாலைகளை தூய்மை படுத்தும் பணியை முன்னெடுத்தனர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.