யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தூய இலங்கை திட்டம் ஆரம்பம்

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களுடைய வழிகாட்டுதலின் கீழ், தூய இலங்கை திட்டத்தின் முதல் கட்டம் பூநகரின் ஸ்ரீ விக்னேஸ்வரம் கல்லூரியில் 2025 பெப்ரவரி 20 அன்று முன்னெடுக்கப்பட்டது.

552 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சி.டி. வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் பயன்படுத்த முடியாத தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை சீர்செய்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், 55 வது காலாட் படைப்பிரிவு கிளிநொச்சி, முரசுமோட்டை கிளி /முருகானந்தா கல்லூரியில், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையை மையமாகக் கொண்டு ஒரு இணையான திட்டத்தினை முன்னெடுத்தது. இந்த முயற்சியில் மரம் நடுதல், பாடசாலை தளபாடங்கள் பழுதுபார்த்தல் மற்றும் சூழலை தூய்மையக்கல் ஆகியவை அடங்கும்.

அதேவளை, 2வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் 2025 பெப்ரவரி 28 அன்று நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலையில் தூய்மைபடுத்தல் மற்றும் தளபாடங்களை பழுதுபார்க்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.