மத்திய பாதுகாப்புப் படையினரால் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்திற்கு உதவி

வரவிருக்கும் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதற்காக, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று முன்னெடுத்தனர்.

இம் முயற்சிக்குத் தேவையான பேரீச்சம்பழங்கள் தியத்தலாவை பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டன. விநியோகத்தின் போது, ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் 20 கிலோ பேரீச்சம்பழம் வழங்கப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களுடன் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.