மேற்கு படையினரால் பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் தூய்மையக்கல் பணி

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு பாதுகாப்புப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 57 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 பெப்ரவரி 20 அன்று நாரம்மல ருவங்கிரி மத்திய கல்லூரியில் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தூய்மையாக்கல் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு 57 வது காலாட் படைபிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் படையினர் பூகொட பெல்பிட்ட ஆரம்ப வித்தியாலயம் மற்றும் பஹலயகொட ஸ்ரீ சுவர்ணபாலி மகா வித்தியாலயத்தில் தூய்மையாக்கல் திட்டங்களை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், 1 வது இலங்கை கவச வாகன படையணி மற்றும் 6 வது கள இலங்கை பீரங்கி படையணியின் படையினர் 2025 மார்ச் 10 அன்று ஜா-எல பமுனுகம கொன்சால்வெஸ் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் புனரமைப்பு திட்டங்களுக்கு உதவினர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 1 வது இலங்கை கவச வாகன படையணி மற்றும் 6 வது கள இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.