16th May 2025
ஐநா அமைதி காக்கும் படையின் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் மோகன் சுப்பிரமணியன் பீவீஎஸ்எம் எவீஎஸ்எம் எஸ்எம் வீஎஸ்எம் அவர்கள் 2025 மே 01 அன்று நிலை 2 இலங்கை இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் கடமைகள் தொடர்பான விளக்கக்காட்சியை இலங்கை இராணுவ வைத்திய படையணியின் லெப்டினன் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யூஎஸ்பீ அவர்கள் நடத்தினார். படைத் தளபதி இலங்கை இராணுவ வைத்திய படையணி வழங்கிய சேவைகளைப் பாராட்டினார். மேலும் கலந்துரையாடலின் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான சாத்தியமான பகுதிகள் இரண்டையும் அவர் எடுத்துரைத்தார்.