17th May 2025
தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ வைத்திய படையின் நிலை 2 மருத்துவமனை 2025 மே 12 ஆம் திகதி வெசாக் போயா தினத்தைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வு போதி பூஜையுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து புத்த காட்சி ஆவணப்படங்கள், வெசாக் கூடு காட்சி, கலாசார பக்தி பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் வெசாக் தானம் போன்ற பல்வேறு வண்ணமயமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பல தென் சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.