15 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்தின் (லெபனான்) உபகரணங்கள் ஆய்வு

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை நிறுவனத்தின் ஆய்வுக் குழு, 15 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு படையினருக்குச் சொந்தமான உபகரண ஆய்வை 2025 மே 23 ஆம் திகதி லெபனான் நகோரா “ஸ்ரீ பேஸ்” முகாம் வளாகத்தில் நடாத்தியது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நா. தரநிலைகளை பூர்த்தி செய்ய இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் முக்கிய உபகரணங்கள் மற்றும் சுய-துணை உபகரணங்களின் செயல்பாட்டு தயார்நிலையை மதிப்பிடுவதற்காக காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உபகரண ஆய்வு குழுத் தலைவர் திரு. இஸ்மாயில் சபீத்தீன் தலைமையிலான குழு, ஐ.நா. தரநிலைகளின்படி அனைத்து உபகரண வகைகளையும் ஆய்வு செய்தது. விஜயபாகு காலாட் படையணியின், இடைக்காலப் படை தளபதி லெப்டினன் கேணல் டி.கே.டி. விதானகே ஆர்எஸ்பீ அவர்கள் ஆய்வுக் குழுவுடன் ஏனைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார்.

அன்றைய நடவடிக்கைகளின் முடிவில், ஒவ்வொரு ஆய்வாளராலும் அவரவர் மதிப்பீடுகளுடன் ஒரு விளக்கவுரை நடாத்தப்பட்டது.