லெபனான் இலங்கைப் பாதுகாப்பு படை குழுவினரின் அழகியற் திறன்

15வது இலங்கைப் பாதுகாப்பு படை குழு 2025 மே 28, அன்று நகோரா லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் ‘சர்வதேச கலாசார விழா 2025’ வை நடாத்தியது.

இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் படையினரால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் இலங்கை பானங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இலங்கைப் படையினரின் கலிப்ஸோ குழு மற்றும் கலாசார குழுவினர் நிகழ்த்திய நாட்டுப்புற நடனங்களும் இசைத்திறன்களும் பார்வையாளர்களை மகிழ்வித்தது.

இந்நிகழ்வில் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் அரோல்டோ லாசரோசான்ஸ் அவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். 15வது இலங்கைப் பாதுகாப்பு படை நிறுவனத்தின் படைத் தளபதி லெப்டினன் கேணல் டிகேடி விதானகே ஆர்எஸ்பீ வீஐஆர் மற்றும் சக அமைதி காக்கும் படையினர் இந்த நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர்.